• Sudhakar Arumugam

    நம் பிள்ளைக்கு போதிக்க நினைக்கும் நற்பண்புகளை தமிழ்ப் பள்ளி வாயிலாக நம் நண்பர்களின் குழந்தைகளுக்கும் கற்றுத்தரலாமே என்ற நோக்கில் தன்னார்வலராக நம் சங்கமம் பள்ளியில் என்னை இணைத்துக்கொண்டேன். அமெரிக்க சூழலில் வாழும் நம் பிள்ளைகளுக்கு தாய்த் தமிழோடு நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, எல்லோரிடமும் பாகுபாடில்லாமல் அன்பு பாராட்டி சார்ந்து வாழ்தல், பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து நட்போடு பழகுதல், வாழ்விலும் தாழ்விலும் நெறிபிறழாமை போன்ற என் ஆசான்கள் எனக்கு ஊட்டி வளர்த்த நற்பண்புகளை பயில்விக்க விழைகிறேன்.
  • Manju Ayampalayam

    “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பது வெறும் பேச்சு அல்ல. தமிழ் நம் அடையாளம், நம் அனைவரையும் இணைக்கும் மெல்லிய நூல். அதை சற்றே வலிமையாகப் பற்றிக்கொண்ட ஒரு சராசரி தமிழ் உணர்வாளர் நான். யான் பெற்ற இன்பம் நம் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதும் ஒரு உந்துதல். அறிவால், தொழிலால் ஆசிரியர் இல்லை என்ற போதிலும், நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், வாழ்வியல் நெறிகள் அறிந்த நாம் […]
  • Keerthika Ulaganathan

    அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தாலும், என் குழந்தைகளை நான் கற்று வளர்ந்த தமிழ்ப் பண்பாடு, பாரம்பரியம், நல்லொழுக்கத்தோடு வளர்க்கவேண்டும் என விரும்பினேன், அதன் முதல்படியாகவே அவர்களுக்குத் தமிழ் கல்வி பயில்விக்கிறேன். ‘சுயநலத்திலும் ஒரு பொதுநலம்’ என்பதுபோல் நான் சங்கமம் தமிழ்ப்பள்ளி ஆர்வலராக 2014ம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். பள்ளியில் தொடர்ந்து ஆர்வலராக, ஆசிரியராக, செயற்குழு உறுப்பினராக, விழா அமைப்பாளராக பங்குகொண்டு சங்கமம் குடும்பத்தோடு இணைந்து பணியாற்றிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. வரும்காலங்களிலும் பள்ளியின் வளர்ச்சிக்கு என்னாலான […]
  • Manu Shanmugam

    கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி என்ற பெருமை கொண்ட என் தாய் மொழியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி
Malarvizhi Peter Raj
Malarvizhi Peter Raj
Manju Ayyampalayam
Manju Ayyampalayam