பேச்சுப் போட்டி – Speech Competition 2022

சுமார் 70 பேர் பங்கேற்ற பேச்சுப் போட்டி ஜனவரி 23, 2022 அன்று நடைபெற்றது. எங்கள் மாணவர்களின் ஆர்வத்தில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், வெற்றியாளர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

Winners will be announced at the second Parents meeting – Wednesday, February 9, 2022. Play video below for winners’ list..

Sunday – January 23, 2022 at 10:30 am.
Please refer to Whatsapp group for Zoom Link instructions

தலைப்பு:
மழலை மற்றும் நிலை 1 பேச்சு வகுப்பு:
பாரதியார் படைப்புகள் அல்லது கண்ணதாசனின் படைப்புகள் (பாடலை மட்டும் கூறினால் போதுமானது) அல்லது ஏதாவது ஒரு கதை சொல்லவும்.
நேர அவகாசம் – மொத்தம் 3 நிமிடம் அவகாசம். ( ஒன்றரை நிமிடத்திற்குக் குறையாமல் பேசுபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்).

நிலை 2 மற்றும் நிலை 3:
பாரதியார் படைப்புகள் அல்லது கண்ணதாசனின் படைப்புகள் (ஏதேனும் ஒரு பாடலை எடுத்து அதன் பொருளும் கூற வேண்டும்.
நேர அவகாசம் – மொத்தம் 3 நிமிடம் அவகாசம். (இரண்டு நிமிடத்திற்குக் குறையாமல் பேசுபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்).

நிலை 4 முதல் நிலை 8 வரை
கண்ணதாசனின் படைப்புகள் அல்லது
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் படைப்புகள் அல்லது
பாரதிதாசனின் படைப்புகள். (ஏதேனும் ஒரு படைப்பை மட்டும் எடுத்து கொண்டு பாடலை கூறி, பொருள் விளக்கி பேசலாம். அல்லது பொதுவாக அவர் படைப்புகளை மேற்கோள் காட்டி பலவற்றையும் பேசலாம்.)

நேர அவகாசம் – மொத்தம் 4 நிமிடம் அவகாசம். ( மூன்று நிமிடத்திற்குக் குறையாமல் பேசுபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்).