menu Coming soon.

Parents Teachers handbook

About Sangamam

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று நம் பிள்ளைகளும் உணரச் செய்வோம் என்ற கருத்தொருமித்த, தன்னார்வமுடைய புலம்பெயர் பெற்றோர்கள் இணைந்து நடத்தும் லாப நோக்கமில்லாத பள்ளி.

இங்கே 4 வயது தொடங்கி வயது வரம்பின்றி தமிழ் பயிலும் ஆர்வமுடைய யாவரும் இணையலாம். பிள்ளைகள் தம் தமிழறிவின் அடிப்படையில் ஆறு நிலைகளாக எழுத்து, பாட்டு, கதை வாயிலாக மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.

TVA எனப்படும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தேர்வு மையம். TVA Basic & TVA Intermediate நிலைகள் வாயிலாக உயிர் எழுத்து, மெய் எழுத்து மற்றும் உயிர்மெய் எழுத்து கற்ற அடிப்படை நிலை முடித்தவர்கள் உரைநடையையும் பயிலலாம்.

நமது பண்டைத் தமிழ் கலாச்சாரமான இயல், இசை, நாடகம், நடனம் என பிள்ளைகள் தம் பன்முகத் திறனை சித்திரைத் திருநாள் அன்றும் ஆண்டுவிழா அன்றும் மேடையேற்ற உதவுகிறோம். தமிழார்வமுடைய யாவரும் எம்முடன் இணைந்து உதவலாம்.