வாரந்திர வகுப்பு விவரம்:

நாள் – Day: சனிக்கிழமை Saturday

நேரம் – Time : 10.45 முதல் 12.15 மணி வரை

இடம் – Venue: Mercer Middle School, Aldie, VA

மழலை

பாடத்திட்டம்: தமிழ்ப் பாட்டு, கதைகள், படங்கள் காண்பித்து பெயர் சொல்லுதல். விளையாட்டின் வழியாக பிள்ளைகளுக்கு தமிழ் அறிமுகப் படுத்துதல்.

மாணவர்: 4 வயதுக்கு மிகாமல் இருக்கும் பிள்ளைகள்.

நிலை -1

பாடத்திட்டம்: உயிர் எழுத்துக்கள் அ முதல் ஔ வரை எழுத, அடையாளம் சொல்ல பயிற்றுவித்தல். தமிழ்ப் பாட்டு, கதைகள், படங்கள் காண்பித்து பெயர் சொல்லுதல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மாணவர்: 4 வயதுக்கு மேல் 5 வயதுக்கு மிகாமல் இருக்கும் பிள்ளைகள்.

நிலை -2

பாடத்திட்டம்: உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் எழுத, அடையாளம் சொல்ல பயிற்றுவித்தல். தமிழ்ப் பாட்டு, கதைகள், படங்கள் காண்பித்து பெயர் சொல்லுதல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மாணவர்: 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள்.

நிலை -3

பாடத்திட்டம்: உயிர் மெய் எழுத்துக்கள் எழுத, அடையாளம் சொல்ல பயிற்றுவித்தல். எளிய வார்த்தைகள் எழுத்து கூட்டி படிக்க பயிற்சி. தமிழ் பாட்டு, கதைகள், படங்கள் காண்பித்து பெயர் சொல்லுதல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மாணவர்: உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் நன்கு படிக்க எழுதத் தெரிந்த பிள்ளைகள்.

நிலை -4

பாடத்திட்டம்: உயிர்மெய்  எழுத்துக்கள் – க வரிசை முதல் கூ வரை திருப்புதல் செய்தல்.
எழுத்து வகைகள் கற்றல் – குறில், நெடில், வல்லினம், மெல்லினம்,இடையினம். உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் பயன்பாட்டு விதிகள் மற்றும் விதி விலக்குகள்.

இலக்கணம் : பெயர்ச்சொல், வினைச்சொல் மற்றும் மூன்று காலங்கள் (இறந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்) அறிமுகம் மற்றும் பயிற்சி.கெ வரிசை முதல் கௌ வரிசை வரை எழுத, அடையாளம் சொல்ல பயிற்றுவித்தல். எளிய வார்த்தைகள் எழுத்து கூட்டி படிக்க பயிற்சி. தமிழ் பாட்டு, கதைகள், படங்கள் காண்பித்து பெயர் சொல்லுதல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மாணவர்: உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் நன்கு படிக்க, எழுதத் தெரிந்த பிள்ளைகள். முதல் பாதி உயிர்மெய் எழுத்துக்களில் சரளம் மற்றும் தேர்ச்சி. 7 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள்.

த.இ.க. அடிப்படை நிலை (TVA Basic)

பாடத்திட்டம்: வார்த்தைகளை சரளமாக படிக்க, எளிய வாக்கியங்கள் அமைக்க,  படிக்க பயிற்சி. TVA Basic Level தேர்வுக்கு தயார் செய்தல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மாணவர்: உயிர்மெய் எழுத்துக்கள் நன்கு படிக்க எழுதத் தெரிந்த பிள்ளைகள்.

த.இ.க. இடைநிலை (TVA Intermediate)

பாடத்திட்டம்: கட்டுரை மற்றும் உரைநடை பயிற்சி. TVA Intermediate தேர்வுக்கு தயார் செய்தல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

மாணவர்: TVA Basic Level Exam தேர்ச்சி பெற்ற பிள்ளைகள்.

மேல்நிலை (FCPS/LCPS world language credit exam preparation)

பாடத்திட்டம்: இலக்கணப் பயிற்சி – தன்மை, முன்னிலை, படர்க்கை, எழுத்து வகைகள், பயன்பாட்டு விதிகள், மூன்று காலங்கள், எளிய சொற்றொடர் அமைத்தல், சிறு பத்திகள் எழுதுதல் மற்றும் வாசித்தல், குழு விவாதம், சிறு கட்டுரை மற்றும் உரைநடை கதை சுருக்கம் செய்து விளக்க மற்றும் எழுதப் பயிற்சி. County அளவில் நடைபெறும் உலக மொழித் தேர்வில் சரளமாக தமிழில் எழுதும் நிலைக்குத் தயார் செய்தல்.

மாணவர்: இலக்கண அறிமுகம், தமிழ் வாசிப்பில் எழுதுவதில் சரளம், பேசுவதில் சரளம் கட்டாயம்