ஆசிரியர்கள் 2017 - 2019
திருமதி. ஸ்வர்ணலதா இளங்கோவன்
ஆசிரியை
என் தமிழ் ஆர்வத்திற்கு முதல் காரணம், என் தாத்தா - சிறு வயதில் இருந்து தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தி, தமிழ் பற்று வளர காரணம் ஆனார். நம் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம், இங்கு வளரும் நம் பிள்ளைகளுக்கும் சென்று அடைய வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். என் இரு பிள்ளைகளும் சங்கமம் தமிழ் பள்ளியில் பல ஆண்டுகளாக தமிழ் பயின்று வருகின்றனர். நான் சங்கமம் தமிழ் பள்ளியில் ஆர்வலராக சேர்ந்து, ஒரு வருடமாக மழலை நிலைக்கு உதவி ஆற்றுகிறேன். எங்கள் உற்றார் உறவினர் அருகில் இல்லாத குறையை சங்கமம் குடும்பத்தினர், போக்குகின்றனர். குழந்தைகளுடன் இருந்து தமிழ் சொல்லி குடுப்பது, மன நிறைவைவும் இன்பமும் அளிக்கிறது.
திருமதி. ராணி சுதாகர்
ஆசிரியை
திருமதி . ஹரிதா தயாளன்
ஆசிரியை
--- ----
ஆசிரியை
திருமதி. கவிதா மனோஜ்குமார்
ஆசிரியை
நான் இல்லத்துக்கு அரசியாக இருக்கிறேன், எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், இருவரும் சங்கமம் தமிழ் பள்ளியில் தமிழ் படிக்கிறார்கள், நான் சங்கமம் தமிழ் பள்ளியில் நான்கு ஆண்டுகளாக தன்னார்வலராக இறக்குகிறேன். சங்கமம் தமிழ் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.ஓய்வு நேரங்களில் இளையராஜா இசையில் பாடல் கேட்பது மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் ரொம்ப பிடிக்கும், நம் தாய் மொழியான தமிழ் மொழியை வளர்ப்போம்.
-- ---
ஆசிரியை
திருமதி. வெரோனிகா விஸ்வநாதன்
ஆசிரியை
சென்னையில் பிறந்த நான், பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழை இரண்டாம் பாடமாக பயின்று வந்தேன். ஆங்கிலம், தமிழ் தவிர வேறு எந்த மொழியும் கற்பதில் ஆர்வம் இருந்தது இல்லை. கடந்த 15 வருடங்கலாக அமேரிக்காவில் எனது கணவருடனும் மூன்று குழந்தைகளுடனும் வசித்து வறுகிறேன். எனது 2 மகள்களும் சங்கமம் தமிழ் பள்ளியில் தமிழ் பயின்று வருகிறார்கள். நான் முதலில் தன்னார்வ பெற்றோராய் சங்கமம் தமிழ் பள்ளியில் என்னை இனைத்துக் கொண்டேன். பிறகு, அங்குள்ள பிற ஆசிரியர்களின் தமிழ் ஆர்வத்தையும் தமிழ் மொழியின் மேல் வைத்திருக்கும் ஈற்பையும் கண்டு வியந்தேன். என்னை இரண்டாம் நிலை ஆசிரியராக நிலை ஒன்று பிள்ளைகளை பயிற்றுவித்து வருகிறேன். தமிழே பேச தெறியாத என் இரண்டு மகள்களும் இப்பொழுது அவர்கள் பாட்டியுடன் தமிழில் பேசி பாடி வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் பிள்ளைகள் போல மற்ற குழந்தைகளுக்கும் ‘சங்கமம்’ பள்ளியுடன் சங்கமித்து நம் தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் கற்று கொடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
திருமதி. கலைவாணி மகேஷ்
ஆசிரியை
வணக்கம், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'' என்பதற்கேப, நான் தமிழில் ஒரு கவிஞா்,புலவர் என சாெல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் எனக்கு தெரிந்த தமிழலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி தன்னார்வலராக சங்கமம் தமிழ் பள்ளியில் பணியாற்று கொண்டு இருக்கிறேன். வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், எழுத படிக்க தமிழில் மட்டுமே தொியும். என் பிள்ளைகளும் சங்கமம் பள்ளி வாயிலாக தமிழ் பயின்று வருகின்றனர். 4வது வருடமாக தன்னார்வலராக பணியற்ற வாய்ப்பு கொடுத்தமைக்கு பெருமையுடன் என் பணியை தொடர்கிறேன். நன்றி!!!
திருமதி. யோகேஸ்வரி
ஆசிரியை
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்ணில் பிறந்த நான் 'சங்கமம் தமிழ் பள்ளி'யில் இரண்டு ஆண்டுகளாக தமிழ் கற்பித்து வருகிறேன். வீட்டில் பிறமொழி பேசினாலும் நான் கற்ற தமிழை என் இரு பிள்ளைகள் கற்க மற்றும் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் பயில மூன்று ஆண்டுகளாக சங்கமம் குடும்பத்தில் இணைந்து இருக்கிறோம். கற்பதைவிட கற்பிக்கும்போது கற்பதே மிக அதிகம் என்பதை உணர்ந்து மேலும் கற்று கற்பிக்க ஆவலாக உள்ளேன்.
திருமதி. சோபியா ஜேம்ஸ்
ஆசிரியை
சங்கமம் தமிழ் பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளும் தமிழில் எழுதவும் சரளமாக பேசவும் வேண்டும் என்ற நோக்கில் கடந்த 3 வருட காலமாக தமிழ் பயிற்றுவித்து வருகிறேன். குழந்தைகளுக்கு கற்று கொடுக்கும் பொழுது நாம் படித்ததை நினைவு கூறவும், மேலும் கற்கவும் முடிகிறது. அதற்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
திருமதி. ஆர்த்தி சிதம்பரம்
ஆசிரியை
தமிழன் என்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா!! என்பதில் அதிக பெருமிதம்  கொள்ளும் நபர்களில் நானும் ஒருத்தி. மொழி ஒரு இனத்தின் அடையாளம் மட்டுமல்ல ஒரு இனத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் ஆணிவேர். தமிழில் நான் பயின்ற மற்றும் இன்னும் பயில விரும்புகின்ற காவியங்கள் ஆனந்தத்தையும் இங்குள்ள அடுத்த தலைமுறையினரும் பயின்று பயன்பெற வேண்டும் என்பது என் சிறிய ஆசை . என் தாய் மொழியை அடுத்த தலைமுறையினருக்கு கடத்திச் செல்ல எனக்கு வாய்ப்பு கொடுத்த சங்கமம் தமிழ் பள்ளிக்கு நன்றி!! எனக்கு  இயல்,இசை,நாடகத்தில் ஆர்வம் மிக அதிகம்.
திரு. நீதிதேவன் தண்டபாணி
ஆசிரியர்
திரு. பிரபாகரன் ரவீந்திரன்
ஆசிரியர்
"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" எனும் வழியில் சங்கமம் தமிழ் பள்ளியில் தமிழ் பயிற்றுவிப்பதில் பெரும் மகிழ்வு கொள்கிறேன்.
திருமதி சங்கீதா ரவிக்குமார்
ஆசிரியை
பள்ளியில் எனக்கு பிடித்த பாடம் தமிழ். எனது தாய் அப்பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றினார். அவர் எனக்கு கொடுத்த ஊக்கமே நான் தமிழ் பற்று கொண்டதற்குக் காரணம். நான் பேசும் மொழி தெலுங்கானாலும் ,எழுத படிக்கத் தெரிந்தது தமிழ் தான். எனவே கற்ற, பண்டை மெழியான தமிழ் , வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகளும் கற்க வேண்டும், தலைமுறை தலைமுறைக்கும் தமிழ் படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பது என் ஆவல். கற்பதோடு நில்லாது, தமிழர் பன்னாட்டு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றையும் கற்று , அதற்குத் தக அவர்கள் வாழ்வில் அதை கடைபிடித்து நடந்து, தமிழர் பண்பாட்டை உயர்த்த வேண்டும் என்பதாலும், பள்ளியில் ஆசிரியைப் பணியை செவ்வனே செய்திட ஆவலாக உள்ளேன்.
திருமதி. மஞ்சு ஷண்முகம்
ஆசிரியை
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி என்ற பெருமை கொண்ட என் தாய் மொழியை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி
-- --
ஆசிரியை
திரு. மோகன்ராஜ் ஷண்முகம்
ஆசிரியர்
தமிழில் சற்றே ஆர்வம். கற்றுக் கொடுக்க முயலும்போது பல விஷயங்களை கற்க வாய்ப்பு கிடைப்பதால், பள்ளி துவக்கத்தில் இருந்து ஆசிரியராக, ஆர்வலராக இருப்பதில் மகிழ்ச்சி.
திருமதி. மஞ்சு அய்யம்பாளையம்
ஆசிரியை
"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்பது வெறும் பேச்சு அல்ல. தமிழ் நம் அடையாளம், நம் அனைவரையும் இணைக்கும் மெல்லிய நூல். அதை சற்றே வலிமையாகப் பற்றிக்கொண்ட ஒரு சராசரி தமிழ் உணர்வாளர் நான். யான் பெற்ற இன்பம் நம் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதும் ஒரு உந்துதல். அறிவால், தொழிலால் ஆசிரியர் இல்லை என்ற போதிலும், நம் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், வாழ்வியல் நெறிகள் அறிந்த நாம் ஒவ்வொருவரும் ஆசிரியரே என்று என் போன்ற ஆர்வலர்களை உவகையுடன் அரவணைத்துக் கொண்டது சங்கமம் தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியின் தொடக்கம் முதலே இதன் அங்கமாக உள்ளேன். நரை தள்ளும் காலம் வரை தமிழ்ச் சேவை ஆற்றவே விழைகிறேன். தமிழ் சார்ந்த விவாதங்கள், வாசிப்புகளில் நாட்டம் உண்டு. தமிழ் இசை மிகப் பிடிக்கும்.