திருமதி. கீர்த்திகா உலகநாதன்
இயக்குநர் குழு
அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தாலும், என் குழந்தைகளை நான் கற்று வளர்ந்த தமிழ்ப் பண்பாடு, பாரம்பரியம், நல்லொழுக்கத்தோடு வளர்க்கவேண்டும் என விரும்பினேன், அதன் முதல்படியாகவே அவர்களுக்குத் தமிழ் கல்வி பயில்விக்கிறேன். 'சுயநலத்திலும் ஒரு பொதுநலம்' என்பதுபோல் நான் சங்கமம் தமிழ்ப்பள்ளி ஆர்வலராக 2014ம் ஆண்டு முதல் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். பள்ளியில் தொடர்ந்து ஆர்வலராக, ஆசிரியராக, செயற்குழு உறுப்பினராக, விழா அமைப்பாளராக பங்குகொண்டு சங்கமம் குடும்பத்தோடு இணைந்து பணியாற்றிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது. வரும்காலங்களிலும் பள்ளியின் வளர்ச்சிக்கு என்னாலான உதவிககளை தொடர்ந்து செய்ய முற்படுவேன். குழந்தைகள் நம் தாய் மொழி கற்க உதவுவோம், நம் தமிழ்ப் பண்பாட்டோடு வளர்ப்போம் !
திருமதி. மலர்விழி மாணிக்கம்
இயக்குநர் குழு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு தாய் மொழியை சொல்லித்தருவதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம் என நினைக்கும் ஒரு தாய் நான். சுற்றுவட்டாரத்தில் தமிழ் கேட்கவும் பேசவும் வாய்ப்பு குறைவு என்ற நிலையில், தமிழ் பேசும் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுடன் ஒன்று சேர்ந்து பழகினால் என் பிள்ளை சுலபமாய் தமிழ் கற்றுக்கொள்ளும் என்ற எண்ணத்தில் சங்கமம் தமிழ் பள்ளியில் 4 ஆண்டுகளுக்கு முன் இணைந்தேன். என்னால் இயன்ற சிறு உதவிகள் செய்ய துவங்கினேன், நண்பர்களின் உந்துதலால் 2 வருடம் குழு உறுப்பினர் பதவியில் இருந்து பள்ளிக்கு என்னால் இயன்ற உதவி புரிந்துள்ளேன். என் பிள்ளைகள் தமிழ் கற்றது மட்டும் இல்லாமல், என்னுடைய சிறு சிறு திறமை மற்றும் ஆர்வம் வெளிவர ஒரு மிகப்பெரிய தளமாக இருந்தது நம் பள்ளி என்று பெருமையுடன் கூறுவேன். என் பிள்ளைகள் சங்கமம் பள்ளியில் படித்து முடித்துவிட்டாலும் என்னால் இயன்ற உதவி என்றும் தொடரும்.
திருமதி. தீபா செந்தில்நாத்
இயக்குநர் குழு
திரு. சந்தோஷ் குமார்
இயக்குநர் குழு
திரு. சுதாகர் ஆறுமுகம்
இயக்குநர் குழு
நம் பிள்ளைக்கு போதிக்க நினைக்கும் நற்பண்புகளை தமிழ்ப் பள்ளி வாயிலாக நம் நண்பர்களின் குழந்தைகளுக்கும் கற்றுத்தரலாமே என்ற நோக்கில் தன்னார்வலராக நம் சங்கமம் பள்ளியில் என்னை இணைத்துக்கொண்டேன்.  அமெரிக்க சூழலில் வாழும் நம் பிள்ளைகளுக்கு தாய்த் தமிழோடு நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, எல்லோரிடமும் பாகுபாடில்லாமல் அன்பு பாராட்டி  சார்ந்து வாழ்தல், பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து நட்போடு பழகுதல், வாழ்விலும் தாழ்விலும் நெறிபிறழாமை போன்ற என் ஆசான்கள் எனக்கு ஊட்டி வளர்த்த நற்பண்புகளை பயில்விக்க விழைகிறேன்.