குறிப்புகள்

Student:
Children who can read and write உயிர் எழுத்துக்கள் (Vowels) and மெய் எழுத்துக்கள் (Consonants).
உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் சரியான உச்சரிப்புடன் தெரிந்திருக்கவேண்டும்.
உயிர்மெய் எழுத்து வரிசையில் க முதல் கூ வரை உள்ள எழுத்துகள் தெரிந்திருக்க வேண்டும். இவ்வெழுத்துக்களை கொண்ட மிக எளிமையான வார்த்தைகளை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

Eligibility:
நிலை 3 முடித்திருக்க வேண்டும்(உயிர் மெய் எழுத்துக்களில் கூ வரிசை வரை ) அல்லது ஏற்கனவே உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் நன்கு படிக்க எழுதத் தெரிந்த பிள்ளைகள்.

Purpose:
எழுத்து வகைகள் கற்றல் – உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்தும்  கற்றுத் தேர்வடைதல். மிக எளிமையான 2,3,மற்றும் 4 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகள் படிக்க மற்றும் எழுத தேர்வடைதல். 
இலக்கணம் – குறில், நெடில், வல்லினம், மெல்லினம்,இடையினம். 
உயிர் மற்றும் மெய் எழுத்துக்களின் பயன்பாட்டு விதிகள் மற்றும் விதி விலக்குகள்.

மொழித்திறன்:
உயிர்,மெய் , உயிர் மெய்  எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.
ஒன்று முதல் ஐம்பது வரை கூறுதல்.
காய்கள், பழங்கள், விலங்குகள் பெயர்களை அறிதல்.
உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.
எளிய முறையில் எழுத, படிக்க  மற்றும் படங்கள் வரைய பயிற்சி.
குழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.

இலக்கணம்:
பெயர்ச்சொல், வினைச்சொல் மற்றும் மூன்று காலங்கள் (இறந்த, நிகழ் மற்றும் எதிர்காலம்) அறிமுகம் மற்றும் பயிற்சி. குறில் , நெடில் , வல்லினம் , மெல்லினம், இடையினம் அறிமுகம் மற்றும் பயிற்சி. தமிழ் எழுத்துக்களின் விதிகள் மற்றும் பயன்பாடு கற்றல். உயிர், மெய்  மற்றும் உயிர் மெய் எழுத்துக்கள்  அனைத்தும் எழுத அடையாளம் சொல்ல பயிற்றுவித்தல். எளிய வார்த்தைகள் எழுத்து கூட்டி படிக்க பயிற்சி. தமிழ் பாட்டு, கதைகள், படங்கள் காண்பித்து பெயர் சொல்லுதல். தமிழில் உரையாட பயிற்சி மற்றும் ஊக்குவித்தல்.

ஆசிரியர்கள்

வீட்டுப்பாடம்

பயனுள்ள இணையதளங்கள்